Friday, November 11, 2005

மழலைகள்



மண்ணில் மலரும்
மரகத வீணைகள்
மணக்கும் போது
மனதில்தான் எத்தனை
மகிழ்வு!

கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற முகம்
இதுதான் மழலைகளின் உலகம்.

மொட்டாய், மலராய்
பட்டுப் போன்ற கன்னத்துடன்
சிட்டாய்ப் பறந்தடிக்கும்
சிட்டுக் குருவிகள் அல்லவோ
இவர்கள்!

மண்ணும் ஒன்று
உணவும் ஒன்று
பாம்பும் ஒன்று
பந்தும் ஒன்று
என்பது இவர்கள் பார்வை!

கொடிய மனத்திலுள்ள
கடின செயலையும்
மடிய வைக்கும்
பிறை முகங்கள்.

நிலவின் முகத்திலும்
கருமை படியும் - ஆனால்
இவர்கள் மதிமுகங்களில்
கருமை படியுமோ?

யாவரும் விரும்புவது மழலைகள்
தாயாரும் மகிழ்வது மழலைகள்
மழலைகள் வாழ்வின் பேழைகள்.

5 Comments:

Blogger சினேகிதி said...

eppidinga ippidi ellam elluthringa?? kavithai solli koduthu varuvathilai illaya?

3:28 AM  
Blogger சிந்து said...

ம்........... கவிதை சொல்லிக்கொடுத்து வருவதில்லை உண்மைதான். ஒருவர் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டாலும் கவிதை வரும்.

நன்றி சினேகிதி.

8:28 AM  
Blogger சினேகிதி said...

hmm pala valikalil paathikapadulum silarukuthan kavithai varum :-

12:41 AM  
Blogger சிந்து said...

ம்..........ம் அதுவும் உண்மைதான்.

3:00 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

செல்வங்கள் பல இருந்தும்
செல்வாக்குகள் பல இருந்தும்
குழந்தை செல்வம் இல்லா மனிதன்
ஏழை மாத்திரமின்றி பாவியும் கூட

11:06 AM  

Post a Comment

<< Home