Saturday, December 16, 2006

வேண்டும் வேண்டும்


அன்பே
நீ ஒரு குடை மாதிரி
வெயில் காலத்திலும்
மழைக்காலத்திலும்
என் கூடவே இருக்க வேண்டும்

நீ ஒரு ஆடை மாதிரி
பகலிலும் இரவிலும்
என் மேனியை தழுவியே
இருக்க வேண்டும்

ஆடையில்லாமல்
ஆடிப்பாடி திரிந்த
அந்த முதல் காதல் ஜோடி
ஆதாம் ஏவாலை சந்திக்க
ஆசை

அந்த
ஆணந்த நிர்வாணத்தை
அவர்களிடம் வாங்கி வந்து
அப்படியே நாமும்
அணிந்து பார்க்க ஆசை

அன்பே
உன் பெயரெழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை கொள்கிறது.

Monday, September 18, 2006

கற்பனையில் ஓர் கனவு




ஏப்போதும் போல்
நேற்றிரவு உன்
கனவுக்காகத்
தூங்கியபடி
காத்திருந்தேன்

ஆனால்
நீ வருவதட்கு முன்
எப்படியோ என்
கனவுக்குள
நுழைந்து விட்ட கடவுள்
மகனே உனக்கு
என்ன வரம் வேண்டும்
என்றார்

எனக்கோ
கோபம் தலைக்கேறி
யார் நீ
உன்னை யார்
என் கனவுக்குள்
அனுமதித்தது

உன்னிடம் இருந்து
எனக்கு எதுவும்
வேண்டாம்
எனக்கு என்ன வேண்டும்
என்பதை
என்னைக் கேட்காமல்
எனக்கு வாரி
வழங்குகிற தேவைதை
ஒருத்தி இருக்கிறாள்

நீ வெளியே போ
என்னவள் வருகிற
நேரமிது
எனச் சொல்லி விட்டேன்

உடனே
கடவுளுக்கு கோபம் வந்து
என்னை எரிக்கப்பார்த்தார்

உன் அரவணைப்பில்
இருக்கும் என்னை
எரித்து விட முடியுமா
அவரால்?

தன் வரலாற்றில்
ஏற்பட்ட முதல்
தோல்வியை
மறக்க முடியாமல்
முகம் வியர்க்க
மறைந்து விட்டார்
கடவுள்.

ஆனாலும்
இந்தக் கடவுளுக்கு
கர்வம் அதிகம்

எல்லோருக்கும் எல்லாமும்
நாம் தான் என்கிற
நினைப்போடு
சுற்றிக்கொண்டு இருக்கிறார்

அவர் பிறருக்கு வேண்டுமானால்
எல்லாமுமாக இருந்து விட்டு
போகட்டும்
ஆனால் எனக்கு
எல்லாமே நீதானே!

இந்த கடவுள் உன்னிடம்
வந்தால் அவரைக்
கொஞ்சம் கண்டித்து வை

என்னவருக்கு என்ன வேண்டும்
என்பதை நான்
பார்த்துக்கொள்கிறேன்
இனி அவரை
தொந்தரவு செய்யாதே என்று.

தெய்வமே
உன்னை
என் இதயத்திலிருந்து
வெளியேற்றி விட்டு
ஒரு பெண்ணைக்
குடி வைத்ததற்காக
கோபித்துக் கொள்ளாதே

உன்னால்
தூணிலோ துரும்பிலோ
வாசம் செய்ய முடியும்
ஆனால் இவளால்?



Monday, August 14, 2006

கனவு........



என் இமைக்குள்

கனவாய் நுழைந்தாய்

துயிலும் நேரத்தில்
நிலவாய் ஒளி தந்தாய்

அந்தி மாலை
சிட்டோடு சிறகு விரிக்க

தேன்சிந்து பூவோடு
முத்தமிட வந்தாய்

அலைபாயும் நேரம்
இசையோடு வந்தாய்

சாந்தமாய் வந்தாய்
சங்கடத்தை தந்தாய்

சொந்தம் என்று வந்தாய்
சோகத்தை தந்தாய்

எல்லாமாய் வந்தாய்
சொல்லாமல் போனாய்...?

பூக்கள் பேசியது
வண்டுதான் அறிந்தது

நான் பேசியது நீ
அறிந்தாயா....?

Wednesday, July 19, 2006

இதயம்


என்
இதயத் துடிப்பு
உன்னை இம்சைபடுத்தியதோ
என்னவோ
நரம்புகளை இழுத்து
முகம் மறைத்துக்கொண்டது
இதயம்

Monday, July 10, 2006

தவிப்பு



இரு விழிகளுக்கிடையே
என் இதயம் திருடிய
உன் தோற்றம்
நீ என்னை விட்டு
தொலைவில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
இழந்து விடுகிறேன்
என்னை

Sunday, July 09, 2006

காதல்


என் விழிகள் பார்த்தது
எத்தனை- ஆனால்
அதில் இனம் காட்டியது
உன்னைத்தானே!

உதடுகள் இருந்தும்
மொழிகள் இருந்தும்
என் மேல்
காதல் கொண்டது
உன் கண்கள் தானே!

கண்ணீர்


நான் சொட்டும்
கண்ணீரில் கூட
உன் கனவுகள்
கரைந்துவிடக்கூடாது
என்பதட்காகவே
என் அழுகை
நிறுத்தியவள்

Friday, July 07, 2006

சுவாசம்


ஒரு சுவாசம்
என்னையும் உன்னுள்
சிறைப்படுத்தி வைத்திருக்கும்
சுவாசம்

அது நீதானே