Friday, November 11, 2005

மனநோயாளிகள்




மண்ணில்
மரணித்துப் போன தம்
மனங்களை
மரணங்களால் தான்
மலர வைக்க முடியுமென்று
உணர முடியாதவர்கள்

மனிதருக்குள்
எத்தனை
மனிதர்கள்
நினைக்கும் போது
நெஞ்சம் கனக்கிறது

மரணங்களை
மனிதர் அடித்து
விரட்டுவதால் தான்,
மரணங்கள்
மனிதர்களை
தேடுகின்றன

வேதனைகளை
சுமந்து
சலனங்களை
உண்டு பண்ணி
வாழ்வதில் தான்
என்ன பிரயோசனம்?

வாழ்க்கைச் சக்கரத்திலே
உடைந்துபோன
மரத்துண்டுகள்
ஆதாம் ஏவாளின்
வாரிசாக
ஜனனித்த
மாந்தருக்கா
இன்நிலை!

மழலைகள் போன்ற
மனதினை
மலர வைப்பது
இரும்பு சங்கிலியால்
மட்டுமே என்று
உணந்திடும்
மானிடமே!

6 Comments:

Blogger கயல்விழி said...

நன்றாக கவிதை எழுதுகின்றீர்கள். நல்ல கருப்பொருள் நல்ல கவிநடை.

8:10 PM  
Blogger சிந்து said...

நன்றி கயல்விழி. தொடர்ந்து இனைந்திருங்கள்.

10:11 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.
நன்றாக உள்ளது கவிதை.

மனநோயுள்ளவர்கள் குழந்தைகள் போன்றவர்களே!

11:02 AM  
Blogger சிந்து said...

உங்கள் வருகைக்கு நன்றி றெனிநிமல்.
தொடர்ந்து இனைந்துருங்கள்.

11:44 PM  
Blogger கானா பிரபா said...

நல்ல கவிதை

11:52 AM  
Blogger நாகராஜ் said...

இந்த மாதிரி தெரிவு செய்த கவிதைகள் என் மனதில் என்றும் இருக்கும்...

12:04 AM  

Post a Comment

<< Home