Saturday, November 12, 2005

அவனை நினைத்து

























என் அன்பே!
நீலவானிடையே
நீந்திடும்
அருகில்
நிலவாய் - என் மனதில்
நீயிருந்தபோது
நிம்மதியுடன்
நிறைந்திருந்தேன் நிலத்தில்

ஆனால் இன்று நீயின்றி
நின் வதனம் காண
உனைத்தேடி நீச்சலிடுகின்றேன்

என் நித்திராதேவிதனைக் கலைத்த
நீ இன்று
நிம்மதியோடு உறங்குகின்றாயா?

நீரில் தத்தளிக்கும் மீனாய்
நிலையிழந்து நிக்கிறேன் நான்.

நிமிடங்கள் நாட்களாக
நாட்கள் நிறை மாதங்களாக
நின் சொல் கேட்க காத்து
நின்று களைத்துப் போகிறேன்.

நிதமும் உன் வரவிற்காய் - உப
நிமிடம்தனை ஒதுக்குகின்றேன்
நிச்சயம்
நீ வருவாய் என
நினைத்து
நித்திரை கொள்கிறேன்.

நீ தந்த உறவு என் மனதில்
நீங்காத சுவடு.

8 Comments:

Blogger சினேகிதி said...

Sinthu enaku ungada kavitha nalla pidichuruku.

particularly this line -என் நித்திராதேவிதனைக் கலைத்த
நீ இன்று
நிம்மதியோடு உறங்குகின்றாயா?

3:26 AM  
Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

yaekkathodu ulla inthe kadhel kavithai super. ( experience..?)

5:56 AM  
Blogger சிந்து said...

நன்றி சினேகிதி. என் கவிதையை நீங்கள் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள்.

8:24 AM  
Blogger சிந்து said...

நன்றி நிலவு நண்பன். என் கவிதையை நீங்கள் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
தொடர்ந்து இணைந்து கொள்ளுங்கள்.

8:24 AM  
Blogger சினேகிதி said...

Sinthu enna ithu answering message mathiri comment yaru potalum itheye solluvingala? :-

11:13 PM  
Blogger சிந்து said...

ஹ ஹ ஏன் அப்பிடி சொல்ல கூடாதா? சினேகிதி.

3:00 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

மங்கையிவள் காத்திருக்கின்றாள்
அவன் வதம் காண
வஞ்சியின் வாஞ்சைதனை தீர்த்து
வைப்பானோ
மதிவதனன் அவன்

11:13 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்.

11:43 PM  

Post a Comment

<< Home