Tuesday, November 15, 2005

உறவுகள் பிரிவதில்லை



















பாச உறவுகள்
எங்கெங்கோ
தேசப் பறவைகளாய்
பறக்கின்றன
ஆசையாய் உறவாடத்தான்
அருகினில் இல்லை
நேசமாய் ஒர்மொழி
உரைத்திடத்தான் வகையில்லை.

திசையெங்கும் பிரிந்திடினும்
திகட்டிடாது நம் பாசங்கள் -வன
வாசம்தான் வாழ்ந்தாலும் -மன
வாசல்தனை மூடமாட்டோம்

நேசம் வைத்திடினும்
நெருஞ்சி முள் குத்திடினும்
இரத்தங்கள் வருவதுண்டே
இடங்கள் மாறிடினும்
பாசங்கள் அழிவதில்லை

வாசமிகு பிள்ளைகளாய்
ரோசமிகு குழந்தைகளாய்
சண்டையிட்ட கணங்கள்
சரிந்திடுமா என்ன?

முரண்பட்ட நெஞ்சங்கள் -இன்று
பண்பட்ட நெஞ்சங்களாய் - உறவுகள்
பின்னிட நினைக்கின்றது
தென்பட்ட உறவுகளைத்
தன்னுறவாய் நினைக்கின்றது
வாழ்விலே விழுந்திட்ட
திரைகளால் பாசங்களிலே
எத்தனை வேஷங்கள்

தீருமா இது?
சேருமா உறவுகள்?
வாழுமா பாசம்?
மீளுமா வழி?

படைத்தவன் விளையாட்டு - இது
பயமூட்டும் கிளித்தட்டு
விநயமுடன் வேண்டுகிறேன்
விருப்பமுடன் இணைந்திடுவாய்.

4 Comments:

Blogger வெளிகண்ட நாதர் said...

தொலை தூரம் போனாலும்
நிலை மாறாது என் உறவு
விலையுண்டா நம் பாசம்
மலை தாண்டி சென்றாலும்
இணை கொள்ள வழியுண்டு
கலங்காதே கண்மணியே

4:43 AM  
Blogger சிந்து said...

நன்றி வெளிகண்ட நாதர்.

2:58 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

உறவுகள் இடம்மாறிடினும்
இடர்கள் வரும் போது
உன்னன்பை மீட்டிப் பார்ப்பாரே

உறவுகள் தேடிப் பெருவதில்லை
மகளே
சேர்ந்த உறவுகள் நிலைத்திடுவது
உன் கையில்.

11:27 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்.

11:39 PM  

Post a Comment

<< Home