Thursday, April 20, 2006

உடன் பிறப்பு


நம்
அன்னை நமக்கு
கொடுத்த பால் ஒன்றுதானே?

ஏன்
நம் என்னங்களும்
கற்பனைகளும்
சிந்தனைகளும்
வேறுபட்டன

கட்டியணைத்து
கதற விரும்புகிறேன்
என் வாய் மட்டும்மல்ல
என் இதயம் கூட
சுமையாகிவிட்டது

பாசம் என்கின்ற
சிலையில் காதல்
எனும் அம்பை
வைத்தாய்.
தோற்றுப் போனது
என் பாசமடி

மீண்டும் மீண்டும்
சிந்தித்துப்பாக்கிறேன்
எமக்குள்
மாற்றமும் மாறுதலும்
எங்கு வேறுபட்டது
என்று

ஏன்
நாம் பிரிந்தோம்
ஆசைகள் கூடியதாலா?
ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது??

நாம்
அணியும் சட்டைகளுக்காய்
சண்டை பிடித்தோம் அப்போது
நம் பாசம் விட்டுப்போக
வில்லையே அன்று

சொத்து
பொருள் என்று
வந்தவுடன்
நாம் பிரிந்து விட்டோமே

நாம்
எதற்காக பிரிந்தோம்
பிரிந்த பிறகு
நமக்குள் எத்தனை
புது புது பந்தங்கள்?????

இன்று
எனது பஞ்சனையில்
கண்ணீருடன்
தனிமை என்னை வாட்டுகிறது

எனக்கும் உனக்கும்
இடையில் யார் வந்தார்
அதில் என்னை
விட்டறிந்த காரணம்தான்
என்னவோ???

நீர்
நிறைந்த கண்ணீருடன்
உன்னைத் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள் என்னை
புரிந்து கொள்வாய் என்று.

உன்
வருகை
நியாயமுடன் என்பது
நிச்சயம்.

நேசமுடன்
சிந்து.............

0 Comments:

Post a Comment

<< Home