Friday, November 18, 2005

காதலா!

















அன்பே!
அன்பு காட்டுகிறேன்
என்று என்னை
அனாதை ஆக்கி விடாதே

ஆறுதல் கூறுகிறேன்
என்று என்னை
அலைய விட்டு விடாதே

அமைதியாக இருக்கிறேன்
என்று என்னை
ஆர்ப்பாட்டம் செய்ய
வழி செய்து விடாதே

ஆரூயிர் காதலியே
என்று என்னை
ஏமாற்றி
அழ வைத்து விடாதே

அரவணைக்கிறேன் என்று
உன் ஆசையை
தீர்த்து விடாதே

காதலிக்கிறேன்
என்று சொல்லி
என் கருவறையை
நிரப்பி விடாதே

நான் அழகு என்று
என் அஸ்தியைக் கரைக்க
வழி செய்து விடாதே

காதலில்
உள்ள மோகத்தில்
கடற்கரைக்குக் கூப்பிட்டு
என்னை கல்லறைக்கு
அனுப்பி விடாதே.

4 Comments:

Blogger சிங். செயகுமார். said...

அன்பே! ஆருயிரே!!
என்றும் என் உயிர் நீயே
சந்தேகம் வேண்டாம் பெண்ணே
செந்தமிழ் மகன் நான்
பாந்தமாய் உன் நேசன் கொண்டு
சொந்தம் கொள்ள நான் தானே
கையோடு கை சேரும் காலம் வரை
மெய்யோடு மேனியெங்கும்
மறந்துமென் கை படா!
சரித்திரம் சொல்லும் நம் காதல்
தரித்திர எண்ணம் இல்லை நமக்கு
வெண்டாம் வெட்டி எண்ணம்
வெள்ளந்தி உள்ளன் நான்
கடலோடு கவி சேர்ப்போம்
மடலோடு நான் இங்கே
நானும் ஓர் தாய் மகனே
நீயும் தாய் தானே ஓர் நாள்
பொறுக்க மாட்டேனா நான்?
வெறுக்கும் எண்ணம் வேண்டாமே!
கருப்பு கள்வன் நானே
நெருப்பு பெண் நீ! தெரியும்
கண் தூங்கு கவலையின்றி
மண் மேல் நம் வாழ்வு
பெண் மேல் எனக்குண்டு
என்றும் காதல்!

2:53 PM  
Blogger சிந்து said...

உங்கள் வருகைக்கும்
பதிவுக்கும்
நன்றி..........

3:35 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.

அன்பினால் எதையும் உருவாக்கலாம்
அஃதே அழிக்கவும் முடியும்
ஆதலால் தூய அன்பினை தேடிப் பெற்றிடு.

11:40 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்.

11:37 PM  

Post a Comment

<< Home