காத்திருப்பு

நீ என்னை நேசிக்கும்வரை
நான் உன்னை நேசிப்பேன்
உன் பாதசுவட்டில்
நான் கால் பதிப்பேன்
நீ என் காதலனானால்.
நீ என் வேர்வைத்துளியிலே
நீராடி
என் சேலைதலைப்பிலே
நீர் துவட்டி
என் தேகசூட்டிலே நான்
உன்னை உறங்கவைப்பேன்
நீ என் காதலானானால்
நீ என் குழந்தையாவும்
நான் உன் குழந்தையாவும்
என் மடியில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க
இருவர் சுவாசமும் ஒன்றுணைந்து
ராகம் ஒன்று நான் தொடுப்பேன்
நீ என் காதலனானால்
1 Comments:
காத்திருப்பு பற்றி ஒரு கருத்து
"இன்ப மான வலி மீண்டும் வேண்டும் வேண்டும் என்றதே"
பாராட்டுக்களுடன்
குமரன்@முத்தமிழ்மன்றம்.கோம்
Post a Comment
<< Home