கனவு........

என் இமைக்குள்
கனவாய் நுழைந்தாய்
துயிலும் நேரத்தில்
நிலவாய் ஒளி தந்தாய்
அந்தி மாலை
சிட்டோடு சிறகு விரிக்க
தேன்சிந்து பூவோடு
முத்தமிட வந்தாய்
அலைபாயும் நேரம்
இசையோடு வந்தாய்
சாந்தமாய் வந்தாய்
சங்கடத்தை தந்தாய்
சொந்தம் என்று வந்தாய்
சோகத்தை தந்தாய்
எல்லாமாய் வந்தாய்
சொல்லாமல் போனாய்...?
பூக்கள் பேசியது
வண்டுதான் அறிந்தது
நான் பேசியது நீ
அறிந்தாயா....?
2 Comments:
முட்ட பொறியல் உங்களுக்கு ரொம்பப் புடிக்குமா?
கவிதையும் நன்று
படங்களும் நன்று..
முக்கியமாக கவிதைக்காக நீங்க தேர்வு செய்யும் படங்கள் அனைத்தும் சூப்பர்
குமரன்@முத்தமிழ்மன்றம்.கோம்
Post a Comment
<< Home