Sunday, November 20, 2005

என் நிழலில் நீ வேண்டும்














உன் நினைவுகள்
என்னை தேடும்போதெல்லாம்
உன் வீட்டுக் கதவை
திறந்து பார் - என்
நிழல் உன் முன்நிற்கும்.

உன் நினைவுகள்
என்னை ரசிக்கும்போதெல்லாம்
உன் இதயக்கதவை
திறந்து பார் - என்
நிழல் உன் இதயத்திற்குள்
நிற்கும்

நான்
எந்த நேரத்திலும்
இறைவனிடம்
எனக்காக நான் வரம்
வேண்டியது இல்லை
நான் வேண்டுவதெல்லாம்
உனக்காக - நீ
என் மடி சாய வேண்டும்.

அப்போது ஆசையோடு
உன் தலை கோதி
உன் நெற்றியில் - நான்
அன்பாய் முத்தமிடும் நாள்
வரவேண்டும் என்றுதான்.

அந்த நாள் உன்
கண்கள் என்னிடம்
ரகசியங்கள் பேசும்
உன் நினைவுகள் எல்லாம்
எனக்குள் கவிதைகள் பாடும்

நீ
எப்போதும்
என் நிழலிலே இருக்க வேண்டும்
என் உயிரே.

- சிந்து

3 Comments:

Blogger சிங். செயகுமார். said...

உன்னோடும் நான்
உறங்குகின்றேன்
கன்றோடு கனிவாய்
மன்றாடும் மாட்டினம்
மன ஊஞ்சல் தனில்
தினம் உன்னோடு சதிராட்டம்
கனநேரம் காணவில்லை
என் கனவில்
உடன் கட்டை ஓர் நினைவு
கடன் என வாழ்க்கையேன்
கண்ணாடி பார்க்கையில்
முன்னாடி உன் முகம்
நினைவுகள் தினம்
அனைவுகள் சுகம்
உன் மடி சேரும் நாள்
கண் மூடி காத்துருப்பேன்
மன் மூடி செல்லும் முன்னே
மனையே உன்னில் சேர்வேன்
கலங்காதிரு
துலங்கும் ஓர் பொழுது
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
கண்ணோடு இமை போலே
கைசேர்வோம்
மைவிழியாலே
உன்னோடு சேர்வேன்
உன் நினைவோடு இங்கே
கடிமனம் வேண்டா
நொடி பொழுது சாரல்
பொடி நடை போடுவோம்
புயலென வருகிறேன்

1:02 AM  
Blogger Dr.Srishiv said...

என்றேனும் நின் நினைவு வீணையில்
என் எண்ண ஸ்வரங்கள் இடைப்படும்போது
அண்ணாந்து ஒரு முறைப்பாருங்கள்
ஏதேனும் ஒரு விண்மீண் நம்
பார்வைகளைப்பிரதிபலிக்கும்
நம் எண்ணங்களை முடிச்சிடும்

ஸ்ரீஷிவ்...அஸ்ஸாமிலிருந்து..

4:08 PM  
Blogger சிந்து said...

உங்கள் வருகைக்கும்
பதிவுக்கும்
நன்றிகள்.

3:35 PM  

Post a Comment

<< Home