Tuesday, November 22, 2005

மானிடமே!










மானிடமே!
நீ தரையை பார்த்து நடந்தால்
ஏதும் தெரியாத பாவி
என்று சொல்லும்
இந்த உலகம்

தலையை நீ
நிமிர்ந்து நடந்தால்
அகங்காரம் கொண்டவர்
என்று சொல்லும்
இந்த உலகம்

அமைதியாக நீ இருந்தால்
ஆக்கிரமிக்கிறாய்
என்று சொல்லும்
இந்த உலகம்

கோபப்பட்டால் நீ
கோபக்காரி
என்று சொல்லும்
இந்த உலகம்

இந்த உலகத்தில்
பாவப்பட்ட ஜீவன்கள்
இருக்கும் வரை
அவர்கள் முன் இருந்தால்
ஒரு பேச்சு
அவர்கள் முன் இல்லாவிட்டால்
ஒரு பேச்சு

அவர்களுக்கு
பொறாமை
போட்டி
இழிவாக உரைத்தல்
மற்றவர்களை
இழக்காரமாகப் பேசுதல்

இது இந்த
பாவப்பட்டவர்கள்
இருக்கும் வரை
வரவேற்பாக இருக்கலாம்

வாழமுடியும்
என்பவர்களுக்கு
நீங்கள் ஒரு
அரங்கேற்ற மேடையாக
இருக்கலாம்.

-சிந்து

3 Comments:

Blogger சிங். செயகுமார். said...

சமத்து பெண்ணே!
சங்கடம் கொள்ளாதே
எண்ணமும் செயலும்
விண்ணுக்கு உயர்த்தும்!
எதிர் நீச்சலும்
தளிர்நடையும் இருந்தால்!
காலம் கலிகாலம்
கோலம் இதுதான் பெண்ணனென
கற்பனை கொள்ளாதே
ஏற்றமிகு எண்ணம் கொள்
மாற்றமுன்டு உன் முன்னால்
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
காற்றுள்ளவரை உண்டு
தோற்று போகா என் நட்பு
மாற்று இல்லா மறுபிறப்பு
உன்னால் முடியும்
இனி ஓர் உலகு செய்ய
கணிவான எண்ணம் உனக்கு
துணிவோடு போறாடு
இனித்துடும் உன் வாழ்வு!

11:28 AM  
Blogger றெனிநிமல் said...

வலியில்லாமல் குழந்தை
அவதரிப்பதில்லை
வழியில்லாமல் பயணம்
முடிவதில்லை
எதிப்பு இல்லாமல் வெற்றி
கிடைப்பதில்லை.

உன் முடிவு சரியென்றால்
திடமாக இரு.

11:45 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்.

11:37 PM  

Post a Comment

<< Home