Friday, November 25, 2005

இது தானா புரட்சி?

நண்பா!

உன்னை முதல் முதலாய்
பார்த்த போது
உனக்குள் புரட்சி
ஒன்று இருப்பதைக் கண்டு
நான் என்னை மறந்து
பரவசம் அடைந்தேன்.


புரட்சி என்னும் வார்த்தைக்கு
பொருள் தேடி
அகராதியை புரட்டினேன்.

அதில் உன் முகம் தெரிய
அகராதி புரட்டுவதை
நிறுத்தி விட்டேன்

நண்பா!
திருமணத்திற்கு
தாலி ஒரு
அவமான
சின்னமாகச் சொன்னாயே?

இன்று
உன் காதலியைக் கண்டவுடன்
தாலி ஒரு
அன்புச் சின்னம்
என்று உளறுகிறாயே?

இதுதான் உன் புரட்சியா?

6 Comments:

Blogger சந்திப்பு said...

“புரட்சி” அதனுள் உறைந்திருக்கும் உண்மையான அர்த்தத்தை இழந்து வருவது கவலைக்குரியது. புரட்சியின் வார்த்தை அர்த்தமிழக்கலாம்: புரட்சி அர்த்தமிழக்காது!

9:30 AM  
Anonymous Anonymous said...

நன்றாக உள்ளது
கவிதை.. எங்கள்
சழூகத்துக்கு தேவையான
கவிதை..!!

எழுத்து நடை
புரிந்து கொள்ள இலகுவாக
உள்ளது..

தெரியமல் கேட்கிறேன்
புரட்சி செய்வதில்
பின்வாங்கிய அந்த
காதலன்..!

காதலிலாவது
தன் கடமையை
தவறாமல் செய்கிறாரா?

தாலி வேண்டும் என்றும்
வேண்டாம் என்றும்
மனம்மாறி முடிவேடுக்கிற
அந்த புரட்சிக்காறன்
காதலியை தூக்கி எறிய
நேரம் தேவையா என்ன??

என் ஆழ்ந்து அனுதாபத்தைக்
கூறுங்கள் அந்த காதலிக்கு..!!

நட்புடன்
-நித்தியா

12:52 PM  
Blogger சிங். செயகுமார். said...

புரட்சி தாலியில இல்லை
புரியாமல் பேசாதே
அன்றொரு நாள் சொன்னேன்
செந்தாமரை பெண்ணே
சந்தோஷம் மனதில்
சிந்தாமல் சிதராமல்
ஐந்தாறு சென்மமும்
சொந்தமாய் வாழ
பாந்தமான மனசே போதும்
கழுத்தில் ஒன்று வேன்டும்
எழுத்தில் ஒன்று வேண்டும்
விழியாளே சொன்னது யார்?
கேட்டது கிடைக்க செய்வது
காளைக்கு அழகன்றோ?
அவள் மானத்திற்கு
தாலி ஒன்றே
தீர்வாகா சொன்னென் அன்று
பொருள் மாற்றி மாற்றி பார்த்தால்
பெண்ணே நான் என் செய்ய?
சண்டை வேண்டாம் சமாதானம் கொள்வோம்
புரட்சி தேடி நம்முள் இருட்சி வேண்டா!

1:49 AM  
Blogger சிந்து said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சந்திப்பு, நித்தியா,சிங்.செயகுமார்.


தாலி வேண்டும் என்றும்
வேண்டாம் என்றும்
மனம்மாறி முடிவேடுக்கிற
அந்த புரட்சிக்காறன்
காதலியை தூக்கி எறிய
நேரம் தேவையா என்ன??

அதுவும் சரிதான் நித்தியா. பாவம் அந்த காதலி.எழுத பேனா கிடைத்தால் முன் பின் சிந்திக்காமல் கிறிக்கிவிடுகிறோம் பிறகு அதை நினைத்து கவலைப்படவேண்டி உள்ளது.

10:13 PM  
Blogger றெனிநிமல் said...

வாழ்த்துக்கள் சிந்து.
இணைந்திருங்கள்.

11:49 AM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல்.

11:36 PM  

Post a Comment

<< Home