என் வானம் நீயல்லவா.........
தாய்க்குப் பின் தாரம்
என்னவளே எனக்கு
ஆதாரம் நீ!
உடலோடு என்
உடல் ஏந்துவாள்
அவள்
உயிரோடு என்
கரு ஏந்துவாள்
அவள்
கட்டிலிலே
அவளைக்
காட்டி
தொட்டிலிலே
என்னைக்
காட்டுவாள்!
பாலைப் போல
வெண்மையானவள்
அவள்
மழை நீரைப் போல
தூய்மையானவள்
அவள்
என்னவள்
அன்பானவள்
அவள் பண்பானவள்
அவள் நேசமானவள்
என் மேல்
பாசமானவள்
அவளிடம் காதலும் உண்டு
மென்மையான
காமமும் உண்டு
அவளிடம் கூடலும் உண்டு
சில சமயம் பொய்யான
ஊடலும் உண்டு
என் இனிய சகியே
என் வாழ் நாளெல்லாம்
நான் உன் கதியே!
காதல் என்பது
இதயங்களில் தீப்பிடிக்கும்
இன்பத் திருவிழா
திருமணம் என்பது
தேகங்களின் தீயணைக்கும்
தேன் மழை விழா
என்னவளே
உன் பெயர்
எழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை
கொள்கிறது........
3 Comments:
என் தோழா !
என் தலைவா!
உன்னுள்ளும் நான்!
எங்கே இந்த சிறுக்கியும்
எங்கோ ஓர் மூலையில்
பத்தோடு பதினொன்று
அத்தோடு நீயுமென்று
பத்ராமல் சொல்வாயென
என்னுள் இருந்தேன்
சந்தோழம் என்னவா
உன் தோள் சாய
ஓர் நாளும் தவமே
உன் மடி தனில்
என் தலை வைத்து
ஒர் கதை கேட்பேனே
எந்நாளும் உன் கூட
ஊடலும் உள்ளங்கை
பூ போல உன்னுள்ளே நானும்
உன் வீட்டு குல மகளாய்
எந்நாளும் என் ஆட்சி ஓங்க
எப்போ என் கழுத்தில் தாலி
தப்பாமல் எனக்கு தகவல்
தருவாய் தலைவா!
எப்போது அந்த பொழுது!
நன்றி சிந்து.
மாலையிட்டு மங்கையின் ஏக்கங்களை தீர்த்து விடு! அவளை வாழ வைத்து விடு.
உங்கள் வருகைக்கு நன்றி சிங். செயகுமார், றெனி நிமல்.
Post a Comment
<< Home