Thursday, December 08, 2005

நினைவுத் தீண்டல்



















நினைவெல்லாம் நீ
மனதெல்லாம் நீ
உன் நினைவுடன் இருந்தால்
பாலவனம் கூட
சோலைவனமாக தெரிந்தது
பௌர்ணமி கூட
நிலாக்காலம் போல் தெரிந்தது

மனதினில் அமைதில்லை
உணவினில் நாட்டமில்லை
உண்பதில் மகிழ்சியில்லை
தூக்கமும் வருவதில்லை
துன்பமும் ஓயவில்லை
ஏக்கமும் தீர வில்லை
என் துயர் மாறவில்லை

உன்னை விட்டு பிரிந்த நாளில் இருந்து
ஒவ்வொரு வருடமும்
என் பிறந்த நாளில் சொல்வாய்
அடுத்த வருடம்
இருவருமாய் கொண்டாடுவோம் என்று
நானும் ஒவ்வொரு வருடமும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்ததுதான் மிச்சம்

மறுபடியும் உன்னை நினைப்பதில்
ஞாயம் இல்லை
மறக்க மனசும் இல்லை
இதோ இன்று எனக்கு பிறந்த நாள்
அதாவது ஞாபகம் இருக்கிறதா உனக்கு?

எனக்கு சாகுவரை பரிசாக
உன் நினைவை மட்டும்
தந்து விட்டு சென்றாயே
கேட்டால் என்னோடு முரன்படுகிறாய்
நான்தான் விலகச் சொன்னேன் என்று

பருவம் தெரியா வயசில் உன்னை
என் இதயக் கோட்டைக்குள்
கட்டி வைத்தேன்
அந்த வயதில் அகராதி பார்க்க
நேரம் இல்லாமல் போய் விட்டது

நேரம் இருந்தும்
அகராதியை பார்ப்பதற்கு
நான் நேரத்தைக் கூட
எனக்குள் அனுமதிக்க
மறுத்து விட்டேன்

நான் அப்போது
அகராதியை பார்த்திருந்தால்
பிரிவு ஒன்று உள்ளது
என்று அறிந்திருந்தால்
உன் அருகில் கூட
நெருங்கி இருக்க மாட்டேன்.

சிந்து............

2 Comments:

Blogger றெனிநிமல் said...

அகராதியில் எப்படி பெண்ணே பிரிவின் கொடுமையை அறிந்து கொள்வாய்?
இப்போது உனக்கு தெரியும் பிரிவின்
கொடுமை! காரணம் இது
அநுபவம்
தந்து சென்ற பாடம் அல்லவோ.

வாழ்த்துக்கள் சிந்து.

5:25 PM  
Blogger சிந்து said...

ம்........ உண்மைதான் றெனி.
உங்கள் வருகைக்கு
நன்றி றெனி.

5:50 PM  

Post a Comment

<< Home