உன் எதிர்காலம் எங்கே?
சகோதரியே!
உனக்கு சொந்த வீடு
உன் தாய் வீடல்லவா
நீ
மணங்கொண்டு போனது
உன் கள்வன் வீடல்லவா
உன்
உடன் பிறந்தோர்
உன்னை நினைத்து
உன் இதய வீட்டிலல்லவா
நீ
எம்மை மறந்து
மனம் மாறிப் போனது
வேதனையல்லவா
நீ
எம்மை விட்டு
உன் கள்வனை
நாடி போன நேரம்
எம் வீட்டுப் பூஞ்சோலை
பூக்காமல் அல்லவா
போய் விட்டது
நீ
அன்று
கள்வனுக்காக
எம்மை விட்டுப் போனாய்
நீ
இன்று
யாருக்காக
கள்வனை விட்டு வந்தாய்?
உன் வாழ்வில்
என்ன சுமையோ
எம்மோடு பகிர்ந்து விடு
என்றும் உனக்காக
உன் உடன் பிறப்புகள்
உன்னை
நினைத்து
உன்
தாய் தந்தையரின்
கண்ணீரை
அகற்றி விடு
உன்
வாழ்வில்
ஒளிமயமான
எதிர்காலம் உண்டு
நீ
இனியும் உன் வாழ்வை
பாலைவனம்
ஆக்கி விடாதே
உன்
வாழ்வில்
சோலைவனத்தை
நாங்கள் மறுபடியும் காணவேண்டும்.
1 Comments:
வாழ்த்துக்கள் சிந்து.
அன்பு சகோதரிக்கு கவியில் புத்தி சொல்கின்றாயா?
அவள் மேல் கொண்ட நேசம் உன்னையும் கவிபாட வைத்ததா?
Post a Comment
<< Home