என்னவனுக்கு ஓர் மடல்.
என்னவனே! இனியவனே!
நீ நலம். நான் நலமா?
கடிதம் என்ன எழுதுவது? எப்படி எழுதுவது?
ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் எனக்கே
நான் எப்படி மடல் வரைய முடியும்?
எதையும் ஒப்பிட்டு உன்னை வர்ணிக்க முடியவில்லை
என்னவனுக்கு இணை இங்கு ஏதும் இல்லை.
அன்பே!... கள்ளா!...
என்னை விட்டு என் இதயத்தை திருடியவனே
அது சுகமா? அல்லது சுகவீனமா?
அதற்கு மூன்று வேளையும்
முறையாக உணவிடுகிறாயா?
இல்லை உணவைக்காட்டி மறைத்து விடுகிறாயா?
அன்பே மறக்காமல் என் இதயத்திற்கு
காலை ஒன்பது மணிக்கும்
மதியம் ஒரு மணிக்கும்
இரவு எட்டு மணிக்கும்
உணவளித்து விடு.
உண்மையாக கடைமைக்காக உணவளிக்காதே
உன்னவள் ஆனை இது
அப்போதுதான் உன் இதயம் இங்கு
உணர்வோடு வாழும்.
உன் உடல், பொருள், ஆவி,
மூன்றும் என்னுடையது
அது என் கை வரும்வரை கனிவோடு கவனித்து
தரும் பொறுப்பு உன்னுடையது.
அன்பே!
இவள் என்ன
தொலைபேசியிலும் தொல்லை தருகிறாள்
கடிதத்திலும் கட்டாயப்படுத்துகிறாள் என்று
கடுகடுப்பது எனக்குப் புரிகிறது
என்ன செய்ய? உன் உடலின் உள்ளிருப்பது
என் உயிரல்லவா?
அந்த உயிரின் நிழலில்தானே
என் இதயம் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறது
அதை நீ வாடவிடுவதும் ஒன்றுதான்
என்னை வாட்டி எடுப்பதும் ஒன்றுதான்.
இவ்வளவு சொல்லிவிட்டேன்
இனியும் உணவு விசயத்தில்
நீ உண்மையாக இருக்கவில்லை என்றால்
என் மீது நீ வைத்திருக்கும்
அன்பு, காதல், உரிமை இவையாவும்
உண்மையா? பொய்யா?
அதையாவது சொல்லிவிடு.
உன் நினைவுகளோடு
தற்சமயம் விடைபெறுகிறேன்...
5 Comments:
vaalththukkal
piriyamanaval
வாழ்த்துக்கள்
உங்களவர் நேரத்திற்கு உண்பதற்கு...பொறாமையாக இருக்கின்றது ;)
ஸ்ரீஷிவ்...
நன்றி ராகினி உங்கள் வருகைக்கு.
ஹி ஹி ஹி பொறாமையாயா இருக்கிறதா? உங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீஷிவ் தொடர்ந்து இணைந்திருங்கள்.
மடலில் தூது அனுப்புகின்றாள் மங்கை இங்கே. பதில் மடல் வந்தால் இணைத்து விடுங்கள் அதையும் இங்கே.
Post a Comment
<< Home