கரைகாணத கண்ணீர் துளி
கருவிழிகள் இரண்டிலே
கரைகாணாத நீர்த்துளியே!
உள்ளங்களின்
உணர்வலைகளை
உருக்கி உகுத்துடுவாய் நீ
உனக்குள் என்ன மாயமோ
உரமுள்ள நெஞ்சும்
உன்னைக் கண்டால்
உனது மடியில்
உருகிடும்!
உந்தன் வரவால்
உலகே இருண்டிடும் நீ
உதிர்ந்தால்
உயிரே கலங்கிடும்
உனக்குள்ளிருக்கும்
சக்திதான் என்ன?
விட்டு விட்டு வந்தாலும் -நெஞ்சங்களை
தொட்டுச் தொட்டுச் செல்வாய்
பட்டதை தெரிந்தாலும் - கைகளை
கட்டி விடுவாய்!
விதியால் வழி தாண்டி
நீ வருவாய் - ஆனால்
நாம் விடை தேடுவதற்காய்
விழியை நனைப்போம்!
விண்ணீரிலும் கண்ணீரிலும்
செந்நீரிலும் நாம் நனைகின்றோம்
ஆனாலும் விடிவெள்ளியைதான்
காணவில்லை.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2807
4 Comments:
நாளை உன் வானில் விடிவெள்ளியைக் காண்பாய் மங்கையே.
Vidi velli vegu thoorathil ila sis
நம் கண் வடிகிற நீர்துளிக்கு
கரையுண்டு...!
நம் கண்ணீருக்கு
கரையுண்டு...!
நீயாக இருட்டுக்குள் இருந்து
உலகம் இருண்டுவிட்டது என்றால்??
சூரியன் அஸ்தமிக்குமுன்
நீ அஸ்தமி விடிவெள்ளி
காண்பாய்...
உங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி றெனிநிமல், சினேகிதி, நித்தியா.
Post a Comment
<< Home