Thursday, December 22, 2005

மார்கழி 26...















ஆண்டாண்டு காலம்
ஆனாலும்
ஆறாத துயரம்

எம்மவர்களை நினைத்து
இரத்தக் கண்ணீர்
சிந்தி கறைபடிந்த நாள்

ஆசியக் கரையோரங்களில்
மரண ஓலம்
ஒலித்த நாள்

பச்சிளங் குழந்தைகளை
பத்து நிமிடத்தில்
பரிதவிக்க பறிகொடுத்த நாள்

பெற்றோர், சிறுவர்,பாலகர்
மற்றோர் உற்றோரை
கதற கதற.....
கண் இமைப்பொழுதில் இழந்த நாள்

இயற்கை
அவள் விதிக்கு
சிக்கிய நாள்

கடல் கன்னி
எம்மவர்களின்
உயிர் குடித்த நாள்

கிளிஞ்சல் சேகரித்த கடலில்
மானிட பிணங்கள்
பொறுக்கிய நாள்

கரையோரங்களில்
கட்டு மரங்களை
தொலைத்த நாள்

அடியோடு
கிராமங்களை
தொலைந்த நாள்

மரணத்தின் மீதே
மரியாதை
போன நாள்

நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத நாள்

மீண்டும் அந்த
துயரங்கள் தாங்கும்
சக்தி எமக்கில்லை

சுனாமி என்ற பெயரில்
எம்மை மீண்டு(ம்)
நெருங்கி விடாதே!

3 Comments:

Blogger ENNAR said...

மாற்றான் மக்களை தன்மக்களாக எடுத்துக்கொண்டாள் கடல்தாய்
இயற்கையின் கொடுமையை என்னவென்பது

2:23 AM  
Blogger சிந்து said...

நன்றி Ennar.

2:22 PM  
Blogger றெனிநிமல் said...

ஒரு வருடம் ஆனாலும் இந்த வடு கொஞ்சம் கூட குறையவில்லை. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்.

9:34 PM  

Post a Comment

<< Home