வேண்டாம் விதவைக் கோலம்.....
சூரியன் இறந்து போன
அந்திப்பொழுது
பசுமையை
பாடையேற்றிய
பருவகாலம்
பனிமூட்டும்
சோலையிலே
வெள்ளையை மட்டும்
ஆட்சி செய்யும்
வேதனைச் செடி
ஒளியிளந்தாள்
நிறமிளந்தாள்
இயற்கைபெண்.
வெள்ளையாடை போர்த்து விட்டார் மேலோர்,
பெண்மை கரைய பார்த்து நின்றார் கீழோர்.
அவள் தாகத்திற்கு ஒளியேற்றி
அவள் தேகத்துக்கு நகை பூட்டி
மறுமலர்ச்சி செய்து காட்டின மின் விளக்குகள்.
4 Comments:
நாங்கள் இயற்கைக்கு
விதவை என்று
பெயர் கொடுத்தாலும்
இயற்கை மறுமலர்சி
கொடுத்து சிறப்பிக்கும்
தன் சூழலை - மனிதர்
தான் இன்னும்
சிறப்புடையாமல்
இருக்கிறார்கள்...!
நல்ல ஒரு கவிதை, வசந்தகாலம் மீண்டும்(மீண்டு) வருமென நம்புவோம்.
எம் வாழ்க்கை எப்படி எப்படி மாறும் என்பதினை படம் பிடித்துக் காட்டுகின்றாள், பூமித்தாய்.
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள். நித்தியா,பிருந்தன்,றெனிநிமல்.
Post a Comment
<< Home