என் தவிப்பை யார் அறிவார்?
இந்த உலகின் அழகினை
என் கண்களால் காண
ஆவலாய் இருக்கின்றேன்
மறுகணம் சிந்திக்கும் போது - இந்த
போலி உலகினை காண
என் மனம் ஏனோ மறுக்கிறது.
இம்மண்ணில் உதித்தது
நான் செய்த பாவமா? - அல்லது
என் பெற்றோர் செய்த பாவமா?
என் பெற்றோர் என்னை நினைத்து
ஒவ்வொரு கனமும் நெஞ்சம்
நெகிழ நெகிழ..............
இந்நிலை ஏன் அவர்களுக்கு.
என் வாழ்க்கையில் - நான்
கண்டதெல்லாம் பெருமூச்சு
ஏக்கம், தவிப்பு
ஏமாற்றம்.
இறைவா நீ
கொடுத்த சாபம்
எனக்கு போதும்
இதை என்னோடு நிறுத்தி விடு.
நான் விழித்துக் கொண்டு
கனவு காண்கின்றேன்
கண்பார்வை அற்ற
குருடனாக!
4 Comments:
ஊணகண்களுக்த்தெரியாது அழகு ஞானகண்களுக்கு மட்டுமே தெரியும்
கவலை வேண்டாம் வருத்தமும் வேண்டாம்
வாழ்க்கை என்பது கனவு தொழிட்சாலை தானே. அங்கே நித்தம் நித்தம் பல கனவுகள் உற்பத்தியாகின்றன.
பெற்றேர் பிள்ளைகள் பாராட்டுவார்கள். ஏன் என்றார், அவர்கள் நேற்றைய பிள்ளைகள்.
இன்றைய பிள்ளைகள் நாளைய பொற்றேர்கள்.
இந்த உலகம் போலி அல்ல. அதன் மனிதர்கள் தான் போலி. நீங்கள் இந்த மனிதர்களோடு உலகம் முடிந்ததாய் நினைக்கிறீர்கள். அது தவறு. இந்த மனிதர்களுக்கு அப்பால் ஒரு உலகம் உண்டு அது நிஜம். அந்த உலகத்தோடு உங்களை தொடர்புப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகம் நிஜமாய் தோன்றும். நான் சொல்லும் உலகம் இயற்க்கை அமைத்து தந்த உலகம்.
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி Ennar, றெனிநிமல், வெங்கி.
Post a Comment
<< Home