வாழ்வு
கார்கால மேகத்தில்
போர்கோலம் பூண்டு தங்கும்
நீர்க்குமிழிபோல்
பாரினிலே நிலைப்பது வாழ்வல்லவோ!
அனலிடை மெழுகாய்
புனலிடை ஓடும் படகாய்
தீனமுடன் உலகில்
தவழ்வது வாழ்வல்லவோ!
பாலை வனத்திலே
பதிந்த தடங்களாய்
கடற்கரை மணலிலே
கட்டிய வீடுகளாய்
கரைவது வாழ்வல்லவோ!
நிலையற்ற வாழ்வெனினும்
நிம்மதியற்ற நிலையெனினும்
பூமலராய்
பாமலராய்
மணம் பரப்புவது வாழ்வல்லவோ!
நிமிட வாழ்வாயினும்
நித்திய சத்தியமாய்
இனித்திடும்
கற்கண்டல்லோ வாழ்வு!
மாந்தர் பலரிடை
வாழ்வினும்
வாழ்வென்றோர்
நிலை உள்ளது வாழ்வல்லவோ!
இணைப்பினும் வாழ்வு
சாவிலும் வாழ்வு
போரிலும் வாழ்வு
இதுவே வாழ்வு!
2 Comments:
வாழ்வின் / வா(ழ்க்)கையின் நிதர்சனத்தை கவிதையாய்ச் 'சிந்து'கிறீர்களா?
வாழ்க்கை வாழ்வதற்கே.
Post a Comment
<< Home