பசி
நெய்தலிலே
கொய்த மலராய்
எம் ஒருசாண் வயிற்றுனுள்ளே
நீ இருப்பாய்.
நேரம் வந்ததும்
வயிற்றினுள்ளே
கரகாட்டமாட தொடங்கிடுவாய்.
சட்டியில் இருப்பதுவோ
உனக்குத் தெரிந்திடாது -ஆனாலும்
உலர்ந்திடும் உனக்கு
உரமிட வேண்டும்!
நீயிருப்பதால் தான்
நாம் வாழுகிறோம்
நீயிருப்பதால் தான்
நாம் இம்மண்ணில்
இருப்பதை உணர்கின்றோம்!
எல்லோரிடமும் இருப்பாய்
எல்லோரையும் கட்டியாள்வாய்
எவ்வேலை இருப்பினும்
உனை மறந்திட்டோர் உண்டோ?
உன்னால் நாம் இயங்குகிறோம்
எம்மால் நீ இயங்குகிறாய்
இது இயற்கையின் நியதி
இறைவனின் கட்டளை!
2 Comments:
வணக்கம்.
உங்களின் படைப்புக்களை படித்தேன்.
கவிதையின் நடை வருகிறது. ஆனாலும் கொஞ்சம் பழைய நெடி(இருபது வருசம்) அதிகமாக தெரிகிறது.
புதிய படைப்புக்களின் தொடர் வாசிப்பு நமது எழுத்துக்களை வளப்படுத்தும். சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
தோழன்
பாலா
அருமையான கவிதை
Post a Comment
<< Home