Tuesday, February 28, 2006

தேவதை..



உன்னைப்பற்றி எழுத
வார்த்தைகள் தேடினேன்
போடி
எந்த வார்த்தையும்
உன் அழகுக்கு
ஈடு இல்லை

தெரியாமலும் அழகுப்
போட்டியில்
கலந்து விடாதே
மற்றவர் ஏமாந்து
விடுவார்கள்

உன் விழிக்குள்
எத்தனை கற்பனைச்சிலைகள்
தெரிகிறது
மலரே உன் அழகுக்கு
எந்த மலரும் ஈடாகாது.

Tuesday, February 21, 2006

தமிழனின் அகதி வாழ்க்கை.


தமிழன் அகதியாய் வந்து
அவதியில் வாழ்கிறான்
தூரதேசம் சஞ்சரிக்கும்
பறவை ஒன்று
தன் தாய்நாடு
திரும்பும் நிலைதான்....

ஒவ்வொரு
தாய்நில தமிழனின்
வெளிநாட்டு வருகையும்

மடிகின்ற மரங்கள் எல்லாம்
மனக் கவலையுடன் இறப்பதில்லை
ஆனால்......

தமிழனாகிய நம்முடய நிலை?
தமிழன் எப்போது நிலையாகுவது?

எட்டு திசையிலும்
திக்கு திக்காக
வாழ்கின்ற தமிழன்
எப்போது ஒன்று கூடுவது?

காலம் பதில் சொல்லுமா?
காலத்திற்காக
காத்திருந்தது போதும் தமிழா!

விழித்திடு! எழுந்திடு!
காலத்தின் கையில் நாம் இல்லை
நம்முடைய கையில்தான்
காலம் உள்ளது.

எழுந்திடு தமிழா
வெற்றி நடை போட
எழுந்திடு.

Friday, February 17, 2006

மது சொல்கிறது



நான் இப்போது
சுகத்தை கொடுப்பேன்
பின்னர்
சோகத்தையும்
கொடுப்பேன்.

Tuesday, February 14, 2006

காதலர் தினம்


எங்கு பிறந்தோம்
எங்கு வழந்தோம்
அறியாமல் காதலுக்காய்
ஓரிடம் சேர்ந்தோம்

சாதி மதம்
பேதம் இன்றி
மனம் விட்டு
பேசி மகிழ்ந்தோம்

அன்று
நம் காதல்
புனிதமானதாகவும்
உண்மையானதாகவும்
ஒளி வீசியது

அன்று
வலன்ரை பாதிரியா
இரு ஜீவனுக்காய்
தன்னை அர்ப்பனித்தார்
அன்று சங்கமித்ததாம்
காதலர் தினம்

இன்று
உன் திருமணத்திற்காய்
என்
காதலும்
மௌனத்திலே
மரணம் ஆகியது ஏன்??

இது என்ன தினம்??

Sunday, February 12, 2006

கனவுகளின் கனவுகள்.


இருவரும்
காதல் மொழி பேசியது
ஆறாண்டு

நினைவுகள்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
அதுமட்டுமா?

உன்
நினைவுகளோடு
என் இரவு

உன்
தொலைபேசியின் அலறலோடு
என் விடியல்

உன்
எண்ணங்களின் சிந்தனையோடு
என் பகல்

உன்
கற்பனைகளின் ரசனைகளோடு
என் உணர்வு

உன்
பெயர் உச்சரித்தபடியே
என் மொழி அன்று

நீ
என்னை விட்டு
விலகியதிலிருந்து

இன்று
நான் உன்னை
மறக்கவும் இல்லை

உனக்கு
என் நிலை
விளங்கவும் இல்லை

என்னால்
உனக்கு புரியவைக்கவும்
முடிய வில்லை

ஆனால் ஒன்று........

என்
மரணம் வரை
உன்
நினைவு தொடரும்...........

நினைவுகளோடு
சிந்து.....

Tuesday, February 07, 2006

என் காதலன்

எனக்குள்ளும் காதல்
வந்தது
புரியா வயதில்
கொஞ்சும் மொழி
பேசிய போது
என்
கண்ணில் மலர்ந்தது
அன்று நீ
என் கை கோர்த்த போது
முளைத்த சந்தோசத்தில்

மனதார பேசி
மனங்கொண்டு பேசி
மனசுக்கு இனிமை காட்டி
மனப்பூட்டு பூட்டி
மனதை தடவி
மனதை மூடி
மனசார உன் கரம் நீட்டினாய்

ஆண் மகனாய்
ஆதவனாய்
ஆண் நீ
ஆசையாய் வளர்க்கப்பட்டாய்
ஆதரவாய் எனக்கு
எனக்காக படைத்த உன்
தாயிடம் தவறாமல் கூறு
தவப் புதல்வனை
தக்க சமயம்
பாரில் தவளவிட்டமைக்கு.

உன் இதயத்தை
எனக்காக
உரு மாற்றி தந்தாய்
என் கனவுகளின்
அர்த்தத்தை
புரிய வைத்தாய்

என்னோடு நீ
இருக்கும் வரை
வானம் கூட என்
கை வசம் தான்
உன்
சுவாசத்தில் தான்
என் இறுதி மரணமும்.

நேசமுடன்
சிந்து........

Friday, February 03, 2006

மனவருத்தம்



தண்ணீரில் மீனழுதால்
அதன் கண்ணீரை
யார் அறிவார்?

நான்கு சுவரினுள்
நறுமணம் வீசினால்
அதன் மணத்தை
யார் அறிவார்?

மூடிய சிற்பியினுள்
முத்திருந்தால் அதன்
பெருமையினை
யார் அறிவார்?

மனதிலுள்ள
புழுக்கங்களையும்
கவலைகளையும்
மூடிவைத்தால்
அதை யார் அறிவார்?

Wednesday, February 01, 2006

நன்றிக் கடன்



மரங்கள் தன்னால்
பிளவுண்ட மண்ணிற்கு
தன் இலைகளை
உதிர்த்து பசலையாகி
நன்றிக்கடனை தீர்க்கின்றன

ஆனால் மனிதன்
உயிரும் தசையும்
கொடுத்த அன்னைக்கு
என்ன கடன் தீர்க்க்கிறான்
கடனல்லவோ வைத்துவிட்டுப்
போகிறான்!