Thursday, December 29, 2005

கலைமேதை




நவரசம் முகத்திலே
நன்றாக
நர்த்தனமிடும்
நற்குணத்தோன்
நாடறிய
உலகறிய

நன்
நடத்தையிலே
நடிகர்
திலகமானவன்
கவலை தீர்க்கும்
கலையின்
கருப்பொருளை
காலமதால் உணர்த்தியவன்

கலையுலகிலே
காலத்தால் அழியாத
காவிய நாயகன் ஆனவன்.

Tuesday, December 27, 2005

என் தவிப்பை யார் அறிவார்?



இந்த உலகின் அழகினை
என் கண்களால் காண
ஆவலாய் இருக்கின்றேன்

மறுகணம் சிந்திக்கும் போது - இந்த
போலி உலகினை காண
என் மனம் ஏனோ மறுக்கிறது.

இம்மண்ணில் உதித்தது
நான் செய்த பாவமா? - அல்லது
என் பெற்றோர் செய்த பாவமா?

என் பெற்றோர் என்னை நினைத்து
ஒவ்வொரு கனமும் நெஞ்சம்
நெகிழ நெகிழ..............
இந்நிலை ஏன் அவர்களுக்கு.

என் வாழ்க்கையில் - நான்
கண்டதெல்லாம் பெருமூச்சு
ஏக்கம், தவிப்பு
ஏமாற்றம்.

இறைவா நீ
கொடுத்த சாபம்
எனக்கு போதும்
இதை என்னோடு நிறுத்தி விடு.

நான் விழித்துக் கொண்டு
கனவு காண்கின்றேன்
கண்பார்வை அற்ற
குருடனாக!

Sunday, December 25, 2005

என்று தீருமோ?



பாலகனே

உன் புகைப்படம்

மூலை முடுக்கில் இருக்கும்

அனைத்து மக்களும்

பார்க்க வேண்டும்.

அநியாயத்திற்காக

வாழும் சில படித்த பெரிய

மேதாவிகள் வெட்கப்பட்டு

கூனிக் குறிகி

முடங்க வேண்டும்.

உனக்கு இந்நிலை

வேண்டாம்.

ஏதும் அறியா நீ

உன்னை என்னிப்பார்க்க

நெஞ்சம் கணக்கிறது

என்று தீருமோ இந்த

ஏழ்மையும் வறுமையும்.

Saturday, December 24, 2005

வேண்டாம் விதவைக் கோலம்.....















சூரியன் இறந்து போன
அந்திப்பொழுது
பசுமையை
பாடையேற்றிய
பருவகாலம்

பனிமூட்டும்
சோலையிலே
வெள்ளையை மட்டும்
ஆட்சி செய்யும்
வேதனைச் செடி

ஒளியிளந்தாள்
நிறமிளந்தாள்
இயற்கைபெண்.

வெள்ளையாடை போர்த்து விட்டார் மேலோர்,
பெண்மை கரைய பார்த்து நின்றார் கீழோர்.
அவள் தாகத்திற்கு ஒளியேற்றி
அவள் தேகத்துக்கு நகை பூட்டி
மறுமலர்ச்சி செய்து காட்டின மின் விளக்குகள்.

Friday, December 23, 2005

குழந்தையின் முகாரி...



இல்லறம்

எனும் பூங்காவில்

இனிக்கின்ற பூ மாலை

காதல்

எனும் கடலில்

கண்டடுத்த முத்து மாலை

உனக்கும்

எனக்கும் இடையே

தோன்றிய நினைவுச் சின்னம்

நம்

பாசத்தின் எல்லையில்

உதித்த மொத்த வரவு

இறைவனின்

அருள் விம்பத்தில்

கருணையின் முழு வடிவங்கள்

மொத்தத்தில்

நடமாடும்

பூஞ்சோலைகள்.

Thursday, December 22, 2005

மார்கழி 26...















ஆண்டாண்டு காலம்
ஆனாலும்
ஆறாத துயரம்

எம்மவர்களை நினைத்து
இரத்தக் கண்ணீர்
சிந்தி கறைபடிந்த நாள்

ஆசியக் கரையோரங்களில்
மரண ஓலம்
ஒலித்த நாள்

பச்சிளங் குழந்தைகளை
பத்து நிமிடத்தில்
பரிதவிக்க பறிகொடுத்த நாள்

பெற்றோர், சிறுவர்,பாலகர்
மற்றோர் உற்றோரை
கதற கதற.....
கண் இமைப்பொழுதில் இழந்த நாள்

இயற்கை
அவள் விதிக்கு
சிக்கிய நாள்

கடல் கன்னி
எம்மவர்களின்
உயிர் குடித்த நாள்

கிளிஞ்சல் சேகரித்த கடலில்
மானிட பிணங்கள்
பொறுக்கிய நாள்

கரையோரங்களில்
கட்டு மரங்களை
தொலைத்த நாள்

அடியோடு
கிராமங்களை
தொலைந்த நாள்

மரணத்தின் மீதே
மரியாதை
போன நாள்

நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத நாள்

மீண்டும் அந்த
துயரங்கள் தாங்கும்
சக்தி எமக்கில்லை

சுனாமி என்ற பெயரில்
எம்மை மீண்டு(ம்)
நெருங்கி விடாதே!

Tuesday, December 20, 2005

அந்த ஓவியம் என்னுடையதல்ல.......





















என் விம்பத்தை
நானே ஓவியமாக வரைவதற்கு
தூரிகையை எடுத்து நானே
தீட்ட ஆரம்பித்தேன்!

கண்களில்
ஒரு காந்தத் தன்மை
தெரியவே வரைந்தேன்.

என் தோழி சொன்னாள்
"கொஞ்சம் கண்ணை
சொக்க வைப்பது போல் வரை"
வரைந்தேன் நானும் அப்படியே!

உதடுகளை
சிறிய வில் போன்று வரைந்தேன்
என் தோழி சொன்னாள்
"கொஞ்சம் நீட்டு" என்று
இசைந்தேன் நானும் அஃதே!

முகமதை வரைந்தேன்
வட்ட நிலா சாயலில்
உரைத்தாள் தோழியவள்
"நீள்வட்ட அகம்" என்று
சம்மதத்துடன் தலை வணங்கியது
என் கை தூரிகை!

நெற்றியோடு நேர்கோடிட்டு
உச்சி பிளந்து வார்ந்தெடுத்து
நீள்வட்ட முகம் களைகட்ட பின்னலிட்டேன்
தோழி சொன்னாள்... இது நீட்டு முகம்
கூந்தலையும் கலைத்துவிடு என்று
அதையும் செய்து விட்டேன்......

சங்கு கழுத்தில்
ஓர் தங்க ஆபரணம்
அணிவிக்க கூறி
அடம்பிடித்தாள்
அதையும் அணிவித்தேன்!

இப்போது மேலும் கீழும்
அசைத்தும் அசைக்காமலும்
உற்றுப்பார்த்தேன் அது
என் எண்ணங்களை விட்டெறிந்த
உண்மையை உணர்ந்து கொண்டேன்

உண்மை தெரிந்தும்
பேச மறுத்த ஓவியத்தைப் போன்றே
நானும் ஊமையானேன்.

அன்புடன்
சிந்து............

Monday, December 19, 2005

என்னவனுக்கு ஓர் மடல்.



என்னவனே! இனியவனே!
நீ நலம். நான் நலமா?
கடிதம் என்ன எழுதுவது? எப்படி எழுதுவது?
ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் எனக்கே
நான் எப்படி மடல் வரைய முடியும்?

எதையும் ஒப்பிட்டு உன்னை வர்ணிக்க முடியவில்லை
என்னவனுக்கு இணை இங்கு ஏதும் இல்லை.
அன்பே!... கள்ளா!...
என்னை விட்டு என் இதயத்தை திருடியவனே
அது சுகமா? அல்லது சுகவீனமா?
அதற்கு மூன்று வேளையும்
முறையாக உணவிடுகிறாயா?

இல்லை உணவைக்காட்டி மறைத்து விடுகிறாயா?
அன்பே மறக்காமல் என் இதயத்திற்கு
காலை ஒன்பது மணிக்கும்
மதியம் ஒரு மணிக்கும்
இரவு எட்டு மணிக்கும்
உணவளித்து விடு.

உண்மையாக கடைமைக்காக உணவளிக்காதே
உன்னவள் ஆனை இது
அப்போதுதான் உன் இதயம் இங்கு
உணர்வோடு வாழும்.

உன் உடல், பொருள், ஆவி,
மூன்றும் என்னுடையது
அது என் கை வரும்வரை கனிவோடு கவனித்து
தரும் பொறுப்பு உன்னுடையது.

அன்பே!
இவள் என்ன
தொலைபேசியிலும் தொல்லை தருகிறாள்
கடிதத்திலும் கட்டாயப்படுத்துகிறாள் என்று
கடுகடுப்பது எனக்குப் புரிகிறது

என்ன செய்ய? உன் உடலின் உள்ளிருப்பது
என் உயிரல்லவா?
அந்த உயிரின் நிழலில்தானே
என் இதயம் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறது
அதை நீ வாடவிடுவதும் ஒன்றுதான்
என்னை வாட்டி எடுப்பதும் ஒன்றுதான்.

இவ்வளவு சொல்லிவிட்டேன்
இனியும் உணவு விசயத்தில்
நீ உண்மையாக இருக்கவில்லை என்றால்
என் மீது நீ வைத்திருக்கும்
அன்பு, காதல், உரிமை இவையாவும்
உண்மையா? பொய்யா?
அதையாவது சொல்லிவிடு.


உன் நினைவுகளோடு
தற்சமயம் விடைபெறுகிறேன்...

Saturday, December 17, 2005

அவள் ஒரு தொடர்கதையானாள்....இசையும் கதையும்

நிலவன் சிறு வயதில் வெளிநாடு என்று வெளிக்கிட்டு, அவன் நோர்வேயை வந்தடையும் வரை அவன் பார்க்காத நாடும் இல்லை, அவன் இருக்காத மறியலும் இல்லையென்றுதான் சொல்லலாம். அங்கு இங்கு என்று அடிபட்டு கடைசியில் நோர்வேக்கு வந்து சேர்ந்தான். நோர்வேயை வந்தடைந்தவுடன் அவனது ஊரில் தெரிந்த ஒரு குடும்பத்தை சந்தித்து ஒரிரு மாதங்கள் அவர்களோடு இருந்தான். பிறகு அவர்கள் சொன்னார்கள் "நிலவன் நீ இப்படி இருக்காமல் அகதியாகப் போய் பதி" என்று. பின்னர் ஒரு நாள் அவனையும் கூட்டிக்கொண்டு போய் அகதியாக அவனைப் பதிவு செய்தார்கள். அகதியாக பதிந்த பின்னர் அவனது வாழ்வு அகதி முகாமில் ஆரம்பித்தது. அந்த முகாமில் இருக்கும் அந்த அதிகாரிகள் அவனுக்கு ஒரு வதிவிடம் கொடுத்து அங்கேயே தங்கக்கூடியே வசதியும் கொடுத்துவிட்டார்கள். மேற்கொண்டு இந்த நாட்டில் இருப்பதென்றால் அந்த நாட்டு மொழி அவசியம். அந்த அதிகாரிகள் நிலவனை மொழி கற்பதற்கு பள்ளிகூடத்தில் சேர்த்தனர். இனி என்ன பள்ளிக்கூடமும் அவனது வதிவிடமுமாய் சிறிது காலம் கழித்தான். சனி ஞாயிறு என்றால் அவனுக்குத் தெரிந்த அந்த குடும்பத்தின் வீட்டுக்கு போய் வருவான். இப்படியே ஒரு வருடத்தில் மொழியும் கற்று விட்டு தொழிற்கல்வியை தொடர்ந்தான். அந்த நேரம் தான் ஒரு நோர்வேஜிய பெண்ணை சந்தித்தான். அவளோடு நல்ல அன்பாக பழகினான் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இருவரும் தங்கள் அன்பை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.


படம்: சேனா
பாடல்:
"சரி மதுசா நான் சொல்லி விடுகிறேன்..........", அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நிலவன் சொன்னான் "நான் ஏற்கனவே திருமணமானவன்.........".

"என்ன ஏற்கனவேஏஏஏ..............." என்று மதுசா ஒருகணம் தடுமாறினாள். நிலவன் ஒரு நடுக்கத்தோடும், பதட்டத்தோடும் திரும்ப அதையே கூறிவிட்டு சிறிது அமைதியானான்.

மதுசாவின் நெஞ்சில் பேரிடியே விழுந்தது போல் இருந்தது. இவை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே ஏன் எவரும் தன்னிடம் கூறவில்லை என்பதே அவளுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. அவளுக்கு கதைப்பதற்கு வார்த்தைகள் எதுவுமே வரவில்லை. மதுசா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்தவள். மதுசா சிறு வயதாக இருக்கும் போது அவர்கள் வீடு திடீர் என்று சிறு தவறால் தீப்பிடித்து விட்டது. அந்த சமயத்துல் மதுசாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டோடு எரிந்துவிட்டனர். அதன்பின் மதுசா அவளின் பெரியம்மாவுடன் தான் வளர்ந்தவள். மதுசா மிகவும் பொறுமை சாலி, மிகவும் அமைதியானவள். நிலவன் விசயத்தில் இதை எல்லாம் நினைத்து பொறுமையாக சகித்துகொள்ள முடிவெடுத்தாள். இதை மேலும் நிலவனிடம் துருவி கேட்பதற்கு அவள் மனம் இடம் கொடுக்க வில்லை. இதை அனைத்தையும் தன் மனதிற்குள் போட்டுப் புதைத்துக் கொண்டாள்.சிறியதொரு இடைவெளியின் பின்னர் நிலவன் மீண்டும் "நான் ஒரு நோர்வேஜிய பெண்ணை திருமணம் செய்து இருந்தேன். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருவரும் பிரிந்து விட்டோம்." என்று மிகச் சுருக்கமாகக் கூறி முடித்துவிட்டான்.


மதுசாவுக்கு மீண்டும் ஓர் இடி........ 'பிள்ளையுமா இருக்கு' என்று தனக்குள் கேள்வி கேட்டு கலங்கினாள். அதுவே அவளுக்கு பெரிய இடியாய் இருந்தது. உண்மையை முதலே சொல்லி இருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். இப்போது அவன் தன்னை ஏமாற்றிவிட்டது போன்ற ஓர் உணர்வு. எங்கேயாவது போய் விடாலாமா என்றுகூட மதுசாவுக்கு தோன்றியது. தன்னுடைய அண்ணன்மார்களை நினைத்து ஒரு கணம் கோபம் தலை உச்சிக்கே ஏறியது. என்ன செய்வது அவளின் பொறுமையான குணத்தால் சகித்துகொண்டு தன் நிலையை நினைத்து, எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் படுக்கையில் சாய்ந்தாள். அவள் தனது முடிவை மறு நாளிலிருந்து செயற்பாட்டுக்கும் கொண்டு வந்தாள். நிலவனும் அவளிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டான். அவளும் நடந்தவற்றை தனது முடிவின்படியே முற்றிலுமாய் மறந்து விட்டு, அவனுடன் இனிதான இல்லறத்தை நடாத்தத் தொடங்கினாள். எந்தவித காரணத்தினாலும் இருவரின் வாழ்க்கையிலும் வேறு எந்த ஒரு கசப்பும் இல்லாமல் இப்படியே இரண்டு வருடம் உருண்டது. திடீர் என்று நிலவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்துவிட்டது.

"நிலவன் வாங்கோ ஹொஸ்பிற்றலுக்கு போவோம்".

"வேண்டாம் மதுசா. பார்த்து போவோம்" என்று புரண்டு படுத்தான் நிலவன்.

"இல்லை நிலவன் வாங்கோ போவோம்" வற்புறுத்தினாள் மதுசா.
மதுசாவின் கரைச்சல் தாங்க முடியாமல் நிலவனும் புறப்பட்டான். இருவரும் ஹொஸ்பிற்றலுக்கு போனார்கள் டொக்டரும் வந்தார். அவனது உடலை செக் பண்ணினார்.மதுசாவை டொக்டர் தனியாக அழைத்தார். உனது கணவருக்கு கேன்சர் என்று அறிவித்தார். மதுசாவின் கண்கள் கண்ணீர் குளம் ஆகியது. என்ன செய்வது என்று அறியாத நிலையில் இருவரும் வீடு திரும்பினார்கள். நிலவனை அடிக்கடி ஹொஸ்பிற்றலுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு வருடங்கள் இப்படியே வீடும் ஹொஸ்பிற்றலுமாக அலைந்தார்கள். மதுசா அவரது அண்ணன்மாருக்கும் இதை அறிவித்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திற்குள் மதுசா நிலவனோடு பட்ட பாடு சொல்லமுடியாது. இருவருக்கும் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் டொக்டர் சொல்லிவிட்டார்.நிலவன் மதுசாவை பார்த்து,
"நீ பாவம் மதுசா. உனக்கு ஏன் இந்த நிலை" என்று கவலைப்படுவான். அதே நேரம் அவனுக்குள், 'தான் உயிரோடு இருக்கும் போது தன்னை விட்டு அவள் போய் விடுவாளோ, வேறு யாரையும் கல்யாணம் செய்துவிடுவாளோ' என்ற ஒரு பயமும் இழையோடியது. இந்த வருத்தம் வந்த பிறகு இவனுடைய மனநிலையில் குழப்பம், மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எங்கேயாவது இருவரும் வெளியில் போவார்கள். யாராவது தெரிந்தவர்கள் வந்தால், சந்தோசமாக கதைப்பார்கள். மதுசாவும் கதைப்பாள். அவர்கள் சொல்வார்கள் "உன் மனைவி அழகானவள். நல்லா கதைக்கிறாள்" என்று. அது நிலவனுக்குப் பிடிக்காது. வீட்டுக்கு வந்தவுடன் குடிப்பான். மதுசாவோடு சண்டை பிடிப்பான். "நீ அவர்களை பார்த்து சிரித்தாய், கதைத்தாய்" என்று ஏதாவது குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பிப்பான்.

நீங்கள் என்னை இனிமேல் வெளிய கூப்பிடாதையுங்கோ. நானும் வரமாட்டேன்" என்று சொல்லி மதுசா அழுவாள். ஆனால் அதே நிலவன் மறுநாள் மதுசாவைப் பார்த்து "மதுசா நேற்று உன்னோடு நான் சண்டை பிடித்தேன். என்னை மன்னித்துக்கொள்" என்பான். "நான் நீண்ட நாளுக்கு உயிரோடு இருக்க மாட்டேன். நான் செத்துவிட்டால் நீ இன்னொரு திருமணம் செய்து நல்லா வாழவேண்டும். சரியா?" என்றும் சொல்லுவான். மதுசாவின் வாழ்க்கைக்காலம் கண்ணீரும் கவலையுமாகத்தான் உருண்டபடி இருந்தது. சில காலத்தில் நிலவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. டொக்டர் பார்த்துவிட்டு இன்னும் ஐந்து மாதம் தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டார். ஐந்து மாதமும் ஹொஸ்பிற்றலில்தான் நிலவன் இருக்க வேண்டும் என்றும் கூறி விட்டார்.மதுசாவின் அண்ணன்மாரும் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் மதுசாவுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும். அதே நேரம் 'அவர்களை நொந்து என்ன செய்வது என் தலை விதி இப்படி அமைந்து விட்டது. யார் என்ன செய்ய முடியும்' என்று தன்னைத்தானே சாமாதானப்படுத்திக் கொள்வாள். இப்படியே ஐந்து மாதத்தில் இரண்டு மாதம் கழிந்து விட்டது. நிலவனின் நிலையும் மிகவும் கவலைக்கிடமானது. மதுசாவுக்கும் ஹொஸ்பிற்றலிலேயே தங்குவதற்கு வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது.ஒவ்வொருநாளும் நிலவனின் முகத்தை மதுசா பார்க்கும் போதெல்லாம் அவள் உயிர் அவளிடத்தில் இல்லை. "மதுசா நான் இன்னும் மூன்று மாதத்தில் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்". அவன் கண்களில் நீர் வழிய கூறுவான். மதுசாவும் அவன் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துகொண்டு, ஒரே கண்ணீரும் கவலையுமாகத்தான் இருப்பாள். இப்படியே போய் நிலமை மோசமாகி நிலவனால் சரியாகக் கதைக்கமுடியாத நிலமைக்குப் போய் விட்டது. மதுசாவின் நிலையை எப்படி சொல்வது. யாரும் அவள் முகத்தை பார்க்கமுடியாது அவ்வளவு வேதனையாக இருக்கும்.நிலவனுக்கு இறுதி நேரம் வந்துவிட்டது. மதுசாவின் மடியில் அடிக்கடி தலை வைத்துப் படுத்துக் கொள்வான் நிலவன். அவன் உயிர் பிரியும் போது மதுசாவின் மடியில்தான் போகவேண்டும் என்று அடிக்கடி சொல்வான். ஒருநாள் அவன் ஆசைப்பட்ட படியே அவள் மடியில் படுத்தவாறே அவன் உயிரும் அவனைவிட்டு பிரிந்துவிட்டது.மதுசா இவ்வளவு காலமும் அழுது அழுது, அவன் இறந்தவுடன் மதுசாவின் கண்களில் கண்ணீரை இல்லை யென்றுதான் சொல்லலாம். காரணம் அவள் கண்களில் கண்ணீர் வற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிலவனும் போய்விட்டான். மதுசாவை தனிமை வாட்டியது. மதுசாவின் தனிமை வாழ்க்கை மூன்று வருடம் இருக்கும். அதன் பின் அண்ணன்மார் மதுசாவை இப்படியே விடுவது சரியில்லை என்றும், அவளுக்கு என்று ஒரு துணை வேண்டும் என்றும், எங்கேயாவது நல்லவனாய் ஒருவனைத் தேடி மதுசாவுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த நேரம்தான் மதுசாவின் கனடாவில் இருக்கும் சொந்த மச்சான் அமலன் நினைவிற்கு வந்தான். அமலனுக்கு நான்கு பெண் சகோதரர்கள். அவர்களை கரைசேர்க்கவேண்டும் என்று அவன் திருமணம் செய்யாமலே இருந்தான். பெண் சகோதரர்களையும் கரை சேர்த்தாயிற்று என்று அவன் நிம்மதியுடன் இருந்தான். அவனுடைய சகோதரர்கள், தாய் தகப்பன் எல்லோரும் தாயகத்தில் தான் இருந்தார்கள். நாம் எல்லோரும் மறப்போமா? அனைவருடைய மனதையும் ஒரே நேரத்தில் சுக்குநூறாக்கிய சுனாமி வந்தபோது, அமலனின் குடும்பத்தில் ஒரே ஒரு சகோதரியை தவிர மற்ற எல்லாரையும் சுனாமி காவு கொண்டது.அதோடு அவன் வாழ்க்கையே தொலைத்துவிட்டதாய் எண்ணி இருந்தான். 'இனி எனக்கு வாழ்க்கையில் எல்லாமே என் சகோதரிதான்' என்று ஒரு முடிவோடு இருந்தான். அவனது சகோதரி அவனை அப்பிடி இருக்க விடவில்லை.
"நீ ஒரு திருமணம் செய்ய வேண்டும். நமது குடும்பமே அழிந்து விட்டது. உனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும" என்று அவள் அவனை ஆறுதல் படுத்தி அவனை ஒருவாறு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டாள்.அமலன் சகோதரியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைத்திருந்தான்.
"நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒன்று கணவன் இறந்த விதவையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சுனாமியால் பாதிக்கப்பட்ட, யாருமே இல்லாத ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்". இதை கேள்விப்பட்ட மதுசாவின் அண்ணன்மார் மதுசாவுக்கு பேசி முடித்துவிடுவோம் என்று கதைத்தனர். அமலனோடும் கதைத்தனர் அமலனும் இதை ஏற்றுக்கொண்டான்.
ஆனால் மதுசாவுக்கு இதில் கொஞ்சம்கூட ஈடுபாடே இல்லை. அண்ணன்மாரும் இதை விடவில்லை. மதுசாவை வற்புறுத்தி ஏற்கவைத்தனர்.ஒருநாள் ஓய்வாக இருந்த ஒருவேளையில், மதுசாவுக்கு தொலைபேசி அழைப்பு.........
மதுசா: ஹலோ......... ஹலோ யார் கதைக்கிறீங்கள்........
அமலன்: நான் அமலன். மதுசா என்ன செய்றீங்கள்? நலமா?.....
மதுசா: ம்............. நீங்கள் என்று ஒரு வேண்டா வெறுப்போடு பதில் அழித்தாள்.
அமலன்: ஏன் மதுசா என்னோடு கதைக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா. சலிப்போடு பதில் வருகிறது.
மதுசா: இல்லை... சொல்லுங்கோ.
அமலன்:நம் இருவருக்கும் திருமணம் பேசி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே.
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?
மதுசா: நான் அப்பிடி ஒன்றும் சொல்லவில்லை. நான் ஏற்கணவே திருமணம் ஆனவள். நீங்கள் அப்பிடியில்லை. நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்வதற்கு நினைக்கிறீர்கள். நான் எப்படி எனது பழைய வாழ்க்கையை மறப்பது? அது கலியாணமாக மட்டும் இருந்தால், நான் ஒரு வேளை மறந்துவிடலாம். அந்த வாழ்க்கையே நானாக இருக்கும் போது எப்படி இன்னொருவரோடு வாழ்வதற்கு என் மனம் இடம்கொடுக்கும். அதை அனுபவிக்காத உங்களுக்கு இது விளங்காது அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்று மூச்சுவிடாமல் கூறினாள்.
அமலன்: எல்லாம் தெரிந்துதான் நான் உங்களை திருமணம் செய்வதற்கு சம்மதித்தேன். நான் எந்த வகையிலும் உங்கள் மனம் நோக நடக்க மாட்டேன். நானும் என் குடும்பத்தையே இழந்துவிட்டு நிற்கிறேன். உங்களுக்கு தெரியும் தானே. நானும் எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன். எனக்கும் தெரியும் கஷ்டம் என்றால் என்ன வென்று. அதனால் தான் இப்படியொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன். எனக்கு திருமணம் ஒன்று நடந்தால் அது இப்படிப்பட்ட ஒரு பெண்ணோடுதான் இருக்கவேண்டும். எனது குடும்பம் அந்த பாழாய்ப் போன சுனாமி அழிந்தவுடன் முடிவெடுத்தேன். நான் உங்களை எந்த வகையிலும் வேதனைப்படுத்த மாட்டேன் சரியா மதுசா.என்று தனது ஆதங்கங்களை கொட்டி தீர்த்தான்.
மதுசா மவுனமாக இருந்தாள்.
அமலன் மீண்டும் "என்ன மதுசா? இதுக்கு மேலும் உங்களுக்கு என்னைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லையா?" என்று கேட்டான்.
மதுசா "உங்களுடைய கஷ்டமெல்லாம் எனக்கு விளங்காமல் இல்லை. நான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். ஆனால்....................நீங்கள்..................." என்று வசனத்தை முடிக்காமல் நிறுத்தினாள்.
அமலனோ "இனி நீங்கள் இப்படி கதைக்க கூடாது. நீங்கள் திருமணம் ஆனவர் என்று நான் ஒரு போதும் நினைக்க மாட்டேன் சரியா." என்று கேட்டான்.
மதுசா "ம்........................" என்று ஒற்றைச் சொல்லாய் பதில் கொடுத்தாள். அமலன் மீண்டும் "ஒகேதானே? இப்ப எல்லாம் சரிதானே........... ? என்னை உங்களுக்கு பிடித்து இருக்குத்தானே?" என்று கேள்விகளை தொடுத்தான்.
மதுசா அதற்கும் "ம்.................. " என்று ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு நிறுத்திக் கொண்டாள். அமலனின் நல்லெண்ணமும், இந்த இளம் வயதில் எவருடைய துணையுமின்றி எப்படி தனியாக வாழப் போகிறோம் என்ற பயமும் அவளை இந்த வாழ்வுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தது.இதே சமயம் கனடாவில் அமலனுக்கு அந்த நாட்டில் இருக்க கூடிய அனுமதியும் இல்லை, விசாவும் இல்லை. மதுசா தான் அவரை நோர்வேக்கு கூப்பிட்டாக வேண்டும். அமலனை தாயகத்துக்கு திரும்பி போகும்படியும், தான் பின்னர் ஸ்பொன்சர் செய்து நோர்வேக்கு கூப்பிடுவதாகவும் மதுசா அமலனிடம் தெரிவித்தாள். அதே போல் அமலனும் தாயகத்துக்கு போனான். மதுசாவும் தாயகத்துக்கு போய் இருவரும் ஒரு கோவிலில் தாலி கட்டிவிட்டு, தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்ந்தனர்............தற்போது அமலனும் நோர்வேக்கு வந்துவிட்டார் இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர்.

படம்: பவர்
பாடல்: மலரே நீ வாழ்க

Friday, December 16, 2005

கரைகாணத கண்ணீர் துளி












கருவிழிகள் இரண்டிலே
கரைகாணாத நீர்த்துளியே!
உள்ளங்களின்
உணர்வலைகளை
உருக்கி உகுத்துடுவாய் நீ
உனக்குள் என்ன மாயமோ
உரமுள்ள நெஞ்சும்
உன்னைக் கண்டால்
உனது மடியில்
உருகிடும்!

உந்தன் வரவால்
உலகே இருண்டிடும் நீ
உதிர்ந்தால்
உயிரே கலங்கிடும்
உனக்குள்ளிருக்கும்
சக்திதான் என்ன?

விட்டு விட்டு வந்தாலும் -நெஞ்சங்களை
தொட்டுச் தொட்டுச் செல்வாய்
பட்டதை தெரிந்தாலும் - கைகளை
கட்டி விடுவாய்!

விதியால் வழி தாண்டி
நீ வருவாய் - ஆனால்
நாம் விடை தேடுவதற்காய்
விழியை நனைப்போம்!

விண்ணீரிலும் கண்ணீரிலும்
செந்நீரிலும் நாம் நனைகின்றோம்
ஆனாலும் விடிவெள்ளியைதான்
காணவில்லை.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2807

Thursday, December 15, 2005

பாசவலி




















அன்புத் தோழியே!
பாசவலி என்பது
எனக்கு மயில் தோகையால்
தடவுவது போல்
சுகம் அளிக்கும்.

அனால் - நீ
என்னை விட்டு
பிரிந்த போதுதான் அறிந்தேன்
மயில் தோகையை
பிடுங்கும் போது
மயிலுக்கு ஏற்படும்
வலிபோல்
அல்லவா இருந்தது.

எண்ணிப்பார் தோழியே!
எனக்குள் இருக்கும்
எண்ணில் அடங்கா ஏக்கங்களை..
உன் அன்புக்காக நான்
எத்தனை நாள் அடிபணிவது?

Wednesday, December 14, 2005

உன் எதிர்காலம் எங்கே?














சகோதரியே!
உனக்கு சொந்த வீடு
உன் தாய் வீடல்லவா

நீ
மணங்கொண்டு போனது
உன் கள்வன் வீடல்லவா

உன்
உடன் பிறந்தோர்
உன்னை நினைத்து
உன் இதய வீட்டிலல்லவா

நீ
எம்மை மறந்து
மனம் மாறிப் போனது
வேதனையல்லவா

நீ
எம்மை விட்டு
உன் கள்வனை
நாடி போன நேரம்

எம் வீட்டுப் பூஞ்சோலை
பூக்காமல் அல்லவா
போய் விட்டது

நீ
அன்று
கள்வனுக்காக
எம்மை விட்டுப் போனாய்

நீ
இன்று
யாருக்காக
கள்வனை விட்டு வந்தாய்?

உன் வாழ்வில்
என்ன சுமையோ
எம்மோடு பகிர்ந்து விடு

என்றும் உனக்காக
உன் உடன் பிறப்புகள்
உன்னை
நினைத்து

உன்
தாய் தந்தையரின்
கண்ணீரை
அகற்றி விடு

உன்
வாழ்வில்
ஒளிமயமான
எதிர்காலம் உண்டு

நீ
இனியும் உன் வாழ்வை
பாலைவனம்
ஆக்கி விடாதே

உன்
வாழ்வில்
சோலைவனத்தை
நாங்கள் மறுபடியும் காணவேண்டும்.

Thursday, December 08, 2005

நினைவுத் தீண்டல்



















நினைவெல்லாம் நீ
மனதெல்லாம் நீ
உன் நினைவுடன் இருந்தால்
பாலவனம் கூட
சோலைவனமாக தெரிந்தது
பௌர்ணமி கூட
நிலாக்காலம் போல் தெரிந்தது

மனதினில் அமைதில்லை
உணவினில் நாட்டமில்லை
உண்பதில் மகிழ்சியில்லை
தூக்கமும் வருவதில்லை
துன்பமும் ஓயவில்லை
ஏக்கமும் தீர வில்லை
என் துயர் மாறவில்லை

உன்னை விட்டு பிரிந்த நாளில் இருந்து
ஒவ்வொரு வருடமும்
என் பிறந்த நாளில் சொல்வாய்
அடுத்த வருடம்
இருவருமாய் கொண்டாடுவோம் என்று
நானும் ஒவ்வொரு வருடமும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்ததுதான் மிச்சம்

மறுபடியும் உன்னை நினைப்பதில்
ஞாயம் இல்லை
மறக்க மனசும் இல்லை
இதோ இன்று எனக்கு பிறந்த நாள்
அதாவது ஞாபகம் இருக்கிறதா உனக்கு?

எனக்கு சாகுவரை பரிசாக
உன் நினைவை மட்டும்
தந்து விட்டு சென்றாயே
கேட்டால் என்னோடு முரன்படுகிறாய்
நான்தான் விலகச் சொன்னேன் என்று

பருவம் தெரியா வயசில் உன்னை
என் இதயக் கோட்டைக்குள்
கட்டி வைத்தேன்
அந்த வயதில் அகராதி பார்க்க
நேரம் இல்லாமல் போய் விட்டது

நேரம் இருந்தும்
அகராதியை பார்ப்பதற்கு
நான் நேரத்தைக் கூட
எனக்குள் அனுமதிக்க
மறுத்து விட்டேன்

நான் அப்போது
அகராதியை பார்த்திருந்தால்
பிரிவு ஒன்று உள்ளது
என்று அறிந்திருந்தால்
உன் அருகில் கூட
நெருங்கி இருக்க மாட்டேன்.

சிந்து............

Saturday, December 03, 2005

இயற்கை















இலைகளோடு
ஊடல் கொள்ளும்
காற்று

இன்பம்
பொங்கி வரும்
சூரியக் கதிர்

போருக்கு
புறப்படும்
இடி மின்னல்

எங்களையும்
ஒருதடவை பாருங்கள் என்று
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்

பூமித்தாயை
குளிரூட்ட
கண்ணீர் சிந்தும் மேகங்கள்

நான் மலர்ந்தால்
வையகமே மலரும் என்று
சொல்லும் மலர்க் கூட்டம்

நடுநிசியிலும் என் பின்னே
வாருங்கள் என்று அழைக்கும்
அழகு நிலா

எண்ணிப் பாருங்கள்...
மனதுக்கு
குளிர்ச்சி தரும்
பசுமைக்கு மத்தியில்
எம்மை!

Friday, December 02, 2005

என் வானம் நீயல்லவா.........




















தாய்க்குப் பின் தாரம்
என்னவளே எனக்கு
ஆதாரம் நீ!

உடலோடு என்
உடல் ஏந்துவாள்
அவள்

உயிரோடு என்
கரு ஏந்துவாள்
அவள்

கட்டிலிலே
அவளைக்
காட்டி

தொட்டிலிலே
என்னைக்
காட்டுவாள்!

பாலைப் போல
வெண்மையானவள்
அவள்

மழை நீரைப் போல
தூய்மையானவள்
அவள்

என்னவள்
அன்பானவள்
அவள் பண்பானவள்

அவள் நேசமானவள்
என் மேல்
பாசமானவள்

அவளிடம் காதலும் உண்டு
மென்மையான
காமமும் உண்டு

அவளிடம் கூடலும் உண்டு
சில சமயம் பொய்யான
ஊடலும் உண்டு

என் இனிய சகியே
என் வாழ் நாளெல்லாம்
நான் உன் கதியே!

காதல் என்பது
இதயங்களில் தீப்பிடிக்கும்
இன்பத் திருவிழா

திருமணம் என்பது
தேகங்களின் தீயணைக்கும்
தேன் மழை விழா

என்னவளே
உன் பெயர்
எழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை
கொள்கிறது........

காதல் விண்ணப்பம்..............




















எனக்கு உன் மடி வேண்டாம்
உன் கால் பட்ட
மண் போதும்..

எனக்கு உன் அன்பு வேண்டாம்
வெறுப்பு போது அந்த வெறுப்பிலும்
என்னால் வாழ்ந்து காட்ட முடியும்

உன் பாசம் வேண்டாம்
நீ என்னை பார்த்த பார்வை
போதும்..

உன் மாடமாளிகை வேண்டாம்
நீ நின்ற நிழல்
போதும் ..

உன் பூந்தோட்டம் வேண்டாம்
உன் அருகாமை
போதும் ..

உன் சுவாசம் கூட வேண்டாம்
உன் இதயத்தில் பட்ட என் விம்பம்
போது..

காதலனே நீ கூட வேண்டாம்
உன்னை நினைத்திருந்த
உன் நினைவு போதும்..