Friday, March 17, 2006

அடிமைச்சிறை தகர்




பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?

மலர்களும் காயப்படுத்தாத
தென்றல் தான் பெண்கள்
புயலாய் மாற்றம் கொண்டால்
மலைகளையும் சாய்த்திடுவர்

இடுப்பொடிந்து நீயும்
தலைவணங்கியது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நீயும்
வாழும் உலகைப் பார்
எல்லாமே உனக்குள்
அடங்குமடி பெண்ணே

பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை
ஆண்கள் இச்சை தீர்ந்தபின்
சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும்
விலங்கினமா பெண்கள்?

அடிமை சிறை தகர்த்து
சிறகுகள் முளைத்து
சுதந்திர வானில் நீயும்
பறந்திட வேண்டாமா?

அடிமைத்தனத்தின் ஆணிவேர்
அறுத்து எறியப்படுமா?
ஆதிக்கத்தின் கொடும் பற்கள்
அடியோடு பிடுங்கப்படுமா?

இராவணர்கள் வாழ் பூமியில்
சீதையாய் நீ பிறந்ததால்
சிறைப்பட்டு வாழ்தல் வேண்டுமா?
இராமர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சந்தேகத் தீக்குளித்தல் வேண்டுமா?

அடிமை விலங்கோடு
நீ வாழ்ந்து மடிந்தால்
உந்தன் கல்லறையிலும்
பூக்கள் மலர்வது கூட
சுமையாகித்தான் போகும்

அடிமை விலங்கு அணிவித்து
வீட்டுக்குள் சிறை வைக்க
நாம் செய்த குற்றமென்ன - சொல்!
பெண்ணாய்ப் பிறந்ததுவோ?

சீரழிந்த உன் இனத்தை
சீர் திருத்த யார் வருவார்?
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாய் - சொல்!
காத்திருந்து என்ன பயன்?
களத்தில் இறங்கிவிடு

சுதந்திரமில்லாத பெண்ணாய்
நான்கு சுவற்றுக்குள்
கண்ணீர் சிந்தி என்ன பயன் - சொல்
கண்ணீருக்கு முதல் அணைபோடு

பெண்ணே உன் கண் எதிரே
சூரியன் காத்திருக்கிறான்
கண்களை மூடிக் கொண்டு
இருட்டுக்குப் பயந்தென்ன பயன் -சொல்
விழிகளை திறந்து விடியலை நோக்கு

என்றும் உங்களோடு
சிந்து...................

Wednesday, March 01, 2006

கேட்டுப்பார்...




இதே இதே
தடங்கள் பதித்த
மணலில் தான்
உன்னை நான்
முதல் முதல் கண்டேன்

அந்த அந்த
மணல் சூட்டில்
என் இழமையும்
புதையும் என்று
நான் அறியேன் அன்பே

தேடி தேடி
வாழ்க்கை முழுவதும்
நான் தேடியது
கிடைக்காமல் என்
பாதங்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

அந்த அந்த
நீலவானம் தொட
நான் நினைத்ததில்லை
உன் நிழல் தொட
ஏங்கினேன் துடித்தேன் தவித்தேன்

ஒரு கணம் ஒரு கணம்
நின்று கேட்டுப்பார்
ஓசையின்றி தேய்ந்துபோன
என் பாதங்களின் ஓசை
உன் காதில் ஒலிக்கும்
.......

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4090

நீ அறிந்ததில்லை




ஆடவனே
உன்னை மறக்கத்தான்
நினக்கின்றேன்
முடிய வில்லை

என்னை
அறியாமல் உன்
நினைவுகள் என்னை
வதைக்கின்றது

நீதான்
என் உலகம்
என்று இன்றுவரை
உன்னை நினைத்து நான்

உன்
நிழலை தேடி
என் கண்கள்
அலைமோதுகிறது

உன்
குரலை தேடி
என் செவிமடல்கள்
தவிக்கின்றது

உன்
நெஞ்சில் என்
முகம் புதைத்து
அழவேண்டும்

உன்
தோழில் என்
கரம் பற்றி
தொங்கவேண்டும்

என்
இனியவா உன்னைச்
சுற்றியல்லவா
என் உலகம் சுழல்கிறது
அறிவாயா நீ??

நான்
அழுகின்ற ஒவ்வொரு
வினாடியும் எனக்குள்
இருக்கும் நீ ஈரமாகின்ற
வேதனை அறிவாயா??


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4111

காதல் கனம்



காதல்
உருவம் அற்றது
ஆனால்
நம் உருவத்தையே
உருக்குலைத்து விடும்.

காதலை
மறந்து விடத்தான்
நினைக்கிறேன்
காதல் காற்றாக வந்து
என்னை தழுவிக்கொள்கிறது

உண்மையில்
என் காதலின்
தகுதி என்னவென்று நான்
சிந்திக்கின்றேன்.


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4112